இடுகைகள்

சமயப்பொறை

படம்
இது ஒரு செய்தியா?   காலம் காலமாக நடப்பது தானே?  உண்மைதான்..!  சமகாலத்தில் இதை செய்தியாகச் சொல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.  ஒவ்வொரு நாளும் மத வெறுப்புணர்வு தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  உலக சமயங்களின் சகோதரத்துவம் பேசிய விவேகானந்தர் பிறந்த மண்ணில் மதவாதம் விதைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.  சமரச சுத்த சன்மார்க்கம் சுடர் விட்ட மண்ணில் சமயங்களுக்குள் பேதம் கற்பிக்கப்படுகிறது.  சனாதன சாயம் பூசப்படுகிறது.   ஓரினமாய் ஒற்றுமையுடன் வாழ வேண்டியவர்களிடம் மதவாதம் ஊற்றப்படுகிறது.   அதனால்தான் நமது ஒற்றுமையை உலகம் உற்றுப் பார்க்க படம் எடுத்துப் பரப்புரை செய்கிறோம்.  அடுத்த தலைமுறைக்கும் தொட்டுத் தொடரும் தமிழின ஒற்றுமையை தரணிக்கு எடுத்துச் சொல்கிறோம்.  ஊருணிகள் நிறைந்து நிற்கும் பேராவூரணி தண்ணீரில் மதவாதப் பருப்புகள் வேகாது என்பதை உலகமெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இதைப் பதிவு செய்கிறோம்.  முடப்புளிக்காடு திருநீலகண்டப் பிள்ளையார் திருக்கோவில் திருவிழா ஒளி வெள்ளத்தில் பளிச்சென தெரிவது இசுலாமிய நண்பர்களால் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகை மட்டுமல்ல தமிழ் மக்களின் சமூகப் ப

ஹிந்தி தெரியவில்லை என்கிற ஒரே காரணத்திற்காக வேலை தர மறுப்பது அறமா?

https://www.facebook.com/share/v/QYR6vk94x3HGmbvi/?mibextid=w8EBqM ஹிந்தி தெரியவில்லை என்றால் "விரைவில் கற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறாமல், "உனக்கு இங்கு வேலை இல்லை" என்று சொல்லும் வட இந்திய நிறுவனங்களை கண்டிக்காமல், ஹிந்தி தெரியாததை ஒரு தேசிய குற்றம்போல் பேசிக் கொண்டிருக்கிறார் டாக்டர் தமிழிசை.   தமிழ்நாட்டில் தமிழ் தெரியாமலேயே ஒன்றிய அரசு அலுவலகங்களில் ஹிந்தி மட்டுமே தெரிந்த இந்தியர்களை நாம் அனுமதிக்கிறோமே! இதற்கு என்ன சொல்லப் போகிறார்?   தமிழ் கற்றுக் கொண்டவர்களுக்கு மட்டுமே இங்கு வேலை என்று சொல்லி அவர்களை அனுப்பி விடலாமா?  தமிழ்நாட்டில் பல தனியார் நிறுவனங்களிலும் ஹிந்தி மட்டுமே தெரிந்த, தமிழ் தெரியாத வட இந்திய பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு இங்கு வந்து தமிழை கற்றுக் கொள்கிறார்கள். தமிழ் தெரியவில்லை என்பதற்காக அவர்களை நாம் புறக்கணிப்பதில்லை. பல துறைகளிலும் வட இந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு சாரை சாரையாய் தமிழ் தெரியாமல் வருகிறார்கள். கட்டிடப் பணி உள்ளிட்ட பல வேலைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு தமிழின் அடிப்படையே தெரியாது. அப்படி

வளர்க்க வேண்டியது மதங்களை அல்ல! சமய நல்லிணக்கத்தை!

படம்
 பேராவூரணி பேரூராட்சி,  நகர் பகுதியில் அமைந்திருக்கும் பெரிய பள்ளிவாசல் சமய நல்லிணக்கத்திற்குச் சான்றாக விளங்கி வருகிறது. சமயச் சார்பின்மை என்பது தமிழர்களின் மிகத் தொன்மையான சிந்தனை. வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை மெய்யியலாளர்கள் போற்றி வளர்த்த பண்பாடு.   கவிஞர் கண்ணதாசன் எழுதி, திருச்சி கலைக்காவிரி வெளியிட்ட "இயேசு காவியம்" நூலின் பின் அட்டைப் பக்கத்தில் திருநீரும் குங்குமமும் அணிந்து கண்ணதாசன் காட்சி தருவார். இன்றும் இயேசு காவியம் பதிப்பிக்கப்படும் பொழுதெல்லாம் கண்ணதாசன் உருவப்படம் அப்படியே அச்சேற்றப்படுகிறது. இதுதான் சமய சமூக நல்லிணக்கம். தமிழர்களின் ஆதி பண்பாடு.   அந்தப் பண்பாடு இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. பேராவூரணி பெரிய பள்ளிவாசலில் நாளெல்லாம் உடல் வருத்தி, நோன்பு இருந்து, உலக நலம் வேண்டி நிற்கும் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் உறவுகளுக்கு பிற சமயத்தைச் சார்ந்தவர்கள் நோன்பு துறப்பு (இஃப்தார்) விருந்து வழங்கி வருவது போற்றத்தக்கது.   பேராவூரணி பகுதியைச் சேர்ந்த சமய நல்லிணக்கத்தை விரும்பும் சான்றோர்களும், வணிகர்களும், அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களும் சமய வ

உழைத்துப் பிழைப்பதே உயர்வு! - தோழர் சிவகாமி அம்மாளின் அற வாழ்வு.

படம்
பேராவூரணி வட்டம், செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தோழர் வீ.சிவகாமி.   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பொதுமக்களுக்கான களப்போராட்டங்களில் முன் நிற்பவர்.   மாதர் சங்கத்தின் ஒன்றியப் பொறுப்பாளராக உள்ள இவர் மாவட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார்.   பொதுமக்கள் நலன் சார்ந்த இவரின் விண்ணப்பங்களை இப்பகுதியில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் கனிவாகவும் உடனடியாகவும் பரிசீலனை செய்வார்கள். தனது வயது மூப்பிலும் அயராது உழைத்து வருகிறார் தோழர் சிவகாமி.   30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்வண்டி பயணிகளுக்கு சுவையாக தேனீர் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.   அகலப்பாதை பணிகளுக்காக தொடர்வண்டி போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த காலத்தில் 100 நாள் பணி செய்து தன்னையும், வயது முதிர்ந்த தனது கணவரையும் காத்துக் கொண்டு கட்சிப் பணிகளையும் கடமை மாறாமல் செய்து வந்துள்ளார். மருத்துவமனை சிக்கல்கள், கிராமச் சாலை சிக்கல்கள், 100 நாள் வேலைக்கான ஊதிய சிக்கல்கள் என பொதுமக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.  தற்பொழுதும் ஒரு கையில் தேநீர் பாத்திரத்தோடும் மற்றொரு கையில் பலகாரப் பையுடனும் தனது க

தோழர் முத்துக்குமரன் அவர்களின் நினைவு நாளில் கல்விக் கட்டமைப்பு பணிகள்

படம்
ஏப்ரல் 1. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பிற்கு இனிய தோழர் முத்துக்குமரன் அவர்களின் நினைவு நாளை ஒட்டி நெடுவாசல் கிராமத்தில் தோழரின் பெயரில் அமையப்பெற்றுள்ள கலையரங்கத்தில் தோழரின் உருவப்படத்திற்கு பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த தோழமைகளால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தோழரின் நினைவு நாளை ஒட்டி இப்பகுதி இளைஞர்களால் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக பகுதியைச் சேர்ந்த பள்ளிக்கூடங்களின் தேவைகள் பட்டியலிடப்பட்டது.   அதற்குரிய நிதியை பல்வேறு தரப்பிலிருந்தும் பெற்ற தோழர்கள் இன்று தோழர் முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளில் பள்ளிகளின் தேவைகளை நிறைவு செய்தனர்.   "ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே  செல்லும்வாய் எல்லாஞ் செயல்"  வள்ளுவன் வகுத்த நெறிப்படி ஒட்டுமொத்த மக்களுக்காகவே தனது வாழ்நாளை எல்லாம் அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த தோழர் முத்துக்குமரன் அவர்கள் தனது மறைவுக்குப் பிறகும் தனது சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட தோழமைகளைக்கொண்டு தொடர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார்.   நினைவு நாளை இப்பகுதி பள்ளிகளின் வளர்ச்சி நாளாக மாற்றிட பெரும் பங்காற்றிய அன்புத் தோழர் நெடுவாசல் ராம்குமார் ராமச்சந்திரன் உ

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா

படம்
மார்ச் 31. பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஆத்தாளூரில் நடைபெற்றது.   முகாமில் கலந்து கொண்ட மாணவர்களால் சாலை மற்றும் கோவில் வளாகங்கள் தூய்மைப் படுத்தப்பட்டது.   நாட்டு நலப்பணித் திட்ட முகாமின் ஏழாவது நாளான மார்ச் 31 ஞாயிறு அன்று நிறைவு விழா ஆத்தாளூர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் சி. இராணி சிறப்பு முகாமின் திட்ட அறிக்கையினை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆத்தாளூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயாஞ்சலி, ஆசிரியர் பூங்கோதை, பேராசிரியர் முனைவர் சதீஷ்குமார், பேராசிரியர் முனைவர் முத்துகிருஷ்ணன், பேராசிரியர்  மணிகண்டன்,  பேராசிரியர் சிவரஞ்சனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் மாணவர்கள் தங்களின் சிறப்பு முகாம்  அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் விழாவில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பள்ளி சத்துணவு அமைப்பாளர் பார்வதி, கல்லூரி காவலர் காளிமுத்து உட்பட  மாணவ மாணவிகள் கலந்து

பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற வேண்டும்! சான்றிதழ் வழங்கும் விழாவில் பேச்சு.

படம்
மார்ச் 30.  பேராவூரணி பாரதி மகளிர் தையல் பயிலகம் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா பெரியார் அம்பேத்கர் நூலக வளாகத்தில் நடைபெற்றது.   பயிலகத்தில் பயிற்சியை நிறைவு செய்த மாணவிகளுக்கு பயிற்சிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் சண்முகப்பிரியா, பேராசிரியர் பிரபா ஆகியோர் பயிற்சிச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினர். பெரியார் அம்பேத்கர் நூலகப் பொறுப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தமது வாழ்த்துரையில், "தையல் கலை என்பது  மிகவும் நுணுக்கம் நிறைந்ததாகும்.  சிறந்த படைப்பாற்றல் மிக்கவர்களால் தான் தையற்கலையை கற்றுக் கொள்ள முடியும்.  திரைப்படமும் சமூகமும் தையல் கலையின் சிறப்பை குறைத்து மதிப்பிட்டுள்ளது.  இன்று நல்ல தையல் கலைஞர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகள் பெருகி உள்ளது.  பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற தான் மேற்கொள்ளும் தொழிலை மதிப்போடும், விருப்பத்தோடும் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.   பயிற்சி மைய ஆசிரியர் நித்யா வரவேற்றார். நிறைவாக பயிற்சி மைய ஆசிரியர் உமா நன்றி கூறினார்.